விறுவிறுப்பில் ஆர்.கே. நகர் தொகுதி! இரட்டை இலை யாருக்கு?

அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கும் சூழலைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியான தி.மு.க ஆர்.கே. நகர் தொகுதியை தங்கள்வசப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து காய் நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதி, அந்தக் கட்சியும் ஆர்.கே. நகர் தொகுதியை நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள்நலக் கூட்டணியோ ஆர்.கே. நகரில் போட்டியிடுவது பற்றி இதுவரை முடிவை அறிவித்ததாகத் தெரியவில்லை. பா.ம.க-வும் திரிசங்கு நிலையில்தான் இருந்து வருகிறது. ஆனால், இதுவரை எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருந்த விஜயகாந்த், தனது தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து ‘தானும் களத்தில் உள்ளேன்’ என்று உறுதி செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*