பிரிட்ஜோவின் உடல் இன்று அடக்கம்… முடிவுக்கு வருகிறது மீனவர்கள் போராட்டம்..!

ங்கச்சிமடத்தில் கடந்த 7 நாள்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் போராட்டம் இன்று மாலை திரும்பப் பெறப்படுகிறது. இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் பலியான பிரிட்ஜோவின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே மார்ச் 6-ஆம் தேதி இரவு இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ உயிரிழந்தார். 21 வயதே ஆன இளம் மீனவரான பிரிட்ஜோ, அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டது, இராமேஸ்வரம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களை கொந்தளிக்க வைத்தது.

 

பிரிட்ஜோவின் சாவுக்கு காரணமான இலங்கை கடற்படையினர் தண்டிக்கப்பட வேண்டும்; பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதிப்புநேராது என்பதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த மீனவர்கள், மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து தங்களுக்கு உறுதியளிக்க வேண்டும்; அதுவரை பிரிட்ஜோவின் உடலைப் பெற்று அடக்கம்செய்ய மாட்டோம் என்று கூறி தங்கச்சிமடத்தில் போராட்டத்தை துவங்கினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*