போர் குற்றவாளி: இலங்கை இராணுவ அதிகாரிக்கு அனுமதி மறுத்த அவுஸ்ரேலியா!

இலங்கையில் 2009-ம் ஆண்டு நிறைவுற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை  ராணுவமும் அரசும் எதிர்கொண்டு வருகிறது. போரில் அப்பாவி பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதை ஐநா அறிக்கையும் உறுதிப்படுத்திய நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும், போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நியாயம் வேண்டியும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பல வடிவங்களில் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 59 ஆவது படைப்பிரிவை வழிநடத்தியவரும்,தற்போது இலங்கை இராணுவத்தின் காலால்படைகளின் பணிப்பாளராக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவுஸ்ரேலியாவிலுள்ள தனது சகோதரனை பார்க்க நுழைவு அனுமதி வேண்டி விண்ணப்பித்திருதார். இறுதியுத்தத்தில் அவரது தலைமையில் இலங்கை படையினர் நிச்சயமாக போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் இழைத்துள்ளார் என்று அவுஸ்ரேலிய துதரகம் தெரிவித்துள்ளதாக அந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
ஐ.நாமனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டியே அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களம் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேவின் நுழைவு அனுமதி கோரிக்கையை மறுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை தடுக்க தவறிவிட்டார் என்றும் அவுஸ்ரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
இராணுவ அதிகாரியின் இந்த குற்றச்சாட்டை அவுஸ்ரேலியா போன்று ஏனைய நாடுகளும் சரி, நடுநிலைமையாக செயல்படவேண்டிய ஐ.நா சபையும் குற்றம் இளைத்தவர்களை இனங்கண்டு தமிழ் மக்களின் தொடர்கதையாக சென்றுகொண்டிருக்கும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே உண்மை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*