டி.டி.வி தினகரன் வேட்புமனு ஏற்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து அவர் போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார்.  தேர்தல் ஆணையம் ஒதுக்கிய தொப்பி சின்னத்தை அணிந்து வந்து  தினகரன் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில். இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்நிலையில் தினகரன் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று திமுக தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளது.
அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தினகரன் மீதான வழக்கு விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று திமுக சார்பில் புகார் கொடுத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.60 பக்கங்களுக்கு திமுக தயாரித்த புகார் மனுவை விசாரித்த தேர்தல் அலுவலர் தினகரன் மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக இளங்கோ தெரிவித்தார். தற்காலிகமாக மனுவை நிறுத்தி வைத்த தேர்தல் அதிகாரி பின்னர் மனுவை ஏற்றுக் கொண்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*