ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் : பொன்.ராதாகிருஷ்ணன்

ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிறது ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத் தேர்தலில் பல முனை போட்டி நிலவி வருகிறது. அதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே, வாக்காளர்களுக்கு தி.மு.க, சசிகலா அணியினர் பணம் வழங்குவதாக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. ஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன. வீடுகள் வழங்க ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் தவறில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*