மகனைக் கொன்றவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்த தந்தை!

ஐக்கிய அமீரகத்துக்கு உள்பட்ட ஓமன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பாலைவனச் சோலை நகரமான அல் ஐன் நகரில் கடந்த 8-12-2016 அன்று பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.கொலையான முஹம்மது பர்ஹான் என்பவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 11 பேருக்கும் கள்ள மது தயாரிப்பத்தில் ஏற்பட்ட சண்டையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவர்களில் ஒருவர் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அல் ஐன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் குற்றவாளிகள் பத்து பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதியாகி விட்டது.அவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்ற இங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் பெருமுயற்சி செய்து வந்தது. அராபிய நாட்டு சட்டங்களின்படி, கொலையானவரின் உறவினர்கள் குற்றவாளிகளை மன்னித்து விட்டால் அவர்கள் மரண தண்டனையில் இருந்து தப்பிப் பிழைக்க முடியும்.

அதன்படி, இந்தியாவை சேர்ந்த அந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு சென்றனர். கொலையான முஹம்மது பர்ஹானின் தந்தையான முஹம்மது ரியாஸ் என்பவரை சந்தித்து தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் பத்து பஞ்சாபியர்களின் உயிரை காப்பாற்ற உதவுமாறு அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.இறந்த பர்ஹானின் உயிருக்கு பகரமாக பணம் கொடுப்பதற்கு தங்களது தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, மனமிறங்கிய முஹம்மது ரியாஸ், குற்றவாளிகள் பத்துபேரையும் மன்னிக்க தீர்மானித்தார்.
பாகிஸ்தானில் இருந்து முஹம்மது ரியாஸ் அங்கு வருவதற்கான விசா, விமான கட்டணம், தங்கும் செலவு போன்றவற்றையும் அந்த தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.பாகிஸ்தானில் இருந்து சமீபத்தில் அல் ஐன் நகருக்கு வந்த அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். தனது முடிவினை நீதிபதியிடம் அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த பாவ மன்னிப்புக்கு பகரமாக (ரத்தப் பணம்) 2 லட்சம் திர்ஹம்களை (இந்திய மதிப்புக்கு சுமார் 35 லட்சம் ரூபாய்) இழப்பீடாக பெற்று கொள்ள சம்மதித்திருப்பதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்து பஞ்சாபியர்களை விடுவிப்பது தொடர்பாக வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி கோர்ட் தீர்மானிக்கவுள்ளது.இந்நிலையில், அல் ஐன் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முஹம்மது ரியாஸ், அவசரத்தில் இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு யாரும் குற்றவாளிகள் ஆவதில் எனக்கு உடன்பாடில்லை என்று தெரிவித்தார்.என்னுடைய மகனை நான் இழந்தது துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சண்டைகளில் ஈடுபட வேண்டாம் என்று இளைய தலைமுறையினரை கேட்டுக் கொள்கிறேன். என் மகனின் இறப்புக்கு காரணமான அந்த பத்துப் பேரையும் நான் மன்னித்து விட்டேன். உண்மையை செல்லப் போனால் அல்லாஹ் அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். பத்து பேரின் உயிர்களை மட்டுமல்ல, வெளிநாட்டில் பிழைக்க வந்து அநியாயமாக உயிரை விடுவதால் பாதிக்கப்படும் அவர்கள் பத்து பேரின் மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுள்ளது என முஹம்மது ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*