தனுஷ் படத்தில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக வெளிவரவுள்ளது. தற்போது இதன் முதல் பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. சமுத்திரகனி, அமலா பால்,ஆண்ட்ரியா போன்றோரும் இதில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. நடுவில் விஜய் சேதுபதி விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் இத்தகவல் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் கவண் படத்துக்காகச் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி, “நான் ‘வடசென்னை’ படத்தில் இருந்து விலகிவிட்டேன்.  மற்றபடி இதனால் வருத்தம் எதுவும் இல்லை. தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரிடமும் நல்ல நட்புறவு உள்ளது”  என்று தெரிவித்தார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*