பணப்பட்டுவாடா : பன்னீர் அணியினர் புகார்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டி.டி.வி தினகரனும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும், தீபா பேரவை சார்பில் தீபாவும் போட்டியிடுகின்றனர். இதனால் ஆர்.கே.நகரில் பலமுனை போட்டி நிலவி வருகிறது. இறுதியாக தேர்தல் களத்தில் 62 பேர் உள்ளனர். இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டி.டி.வி தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த எம்.பி மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று டெல்லியில் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் ஆதராவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். தலைமை தேர்தல் ஆணையம் இதை உடனே தடுத்தி நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*