மீண்டும் யுவன்-சிம்பு கூட்டணி

சிலம்பரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்தில் சிம்புவுக்காக யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடி முடித்தார். தற்போது சிம்பு, யுவனின் இசையமைப்பில் உருவாகிவரும் ‘ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்துக்காக ஒரு பாடலை பாடிக்கொடுத்திருக்கிறார். ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய தரணி தரன் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். கொலை பற்றிய மர்மம் நிறைந்த கதையாக உருவாகும் இதில் மெட்ரோ சிரிஷ் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலமாக சிம்பு யுவன் நட்புக் கூட்டணியின் பயணம் தொடர்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*