ஈழப்போரில் இந்தியாவின் பங்கு புதிய ஆதாரம்!

இலங்கையில் 2009- ம் ஆண்டு  தமிழ் மக்கள் வசித்த வடபகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்பதாகக் கூறி யுத்தத்தை முன்னெடுத்தது இலங்கை அரசு. இப்போருக்கு இந்தியா ராணுவ ரீதியான உதவிகளைச் செய்தது. போரை நிறுத்தக் கோரி தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் நடந்த போராட்டங்களும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் இந்தியா மீது இலங்கையில் நடத்தப்பட்ட போருக்கு உதவுவதாக குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இக்குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்து வந்தாலும்.

இலங்கை போரில் இந்தியாவின் பங்கு என்ன என்பதற்காக புதிய ஆதாரம் இப்போது வெளியாகி உள்ளது. இந்திய கடற்படையினரால் கடந்த 29 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த ரீ.யூ 142எம் ரக ரோந்துவிமானம் ஒன்று பணியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்ட  நிகழ்வொன்று நேற்று (வியாழக்கிழமை)  அரக்கோணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய கடற்படையின் பிரதான அதிகாரி சுனில் லாண்பா இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர் “இந்த விமானம் பல சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றிருந்த போது அப்போது அமைதிப்படைக்கு உதவியாக இந்த விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திற்கு ஆதரவாக இலங்கை வான்பரப்பில் பணியில் ஈடுபட்டது” என்று சொன்ன பிறகு தாமதாக தான் சொன்ன தகவல் அரசியல் ரீதியாக சங்கடங்களை உருவாக்கும் என்பதை புரிந்து கொண்ட அந்த அதிகாரி. விமானச் சேவையை அமைதிப்படை காலம் என்று மட்டும் சுருக்கி பேசினார். ஈழப் போரில் இந்தியாவின் பங்கு பற்றி பல பக்கங்கள் எழுதப்பட்டு விட்டாலும் ஒரு இராணுவ அதிகாரியே இப்படி கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*