டிஜிட்டல்வாசி: “அது என்ன ஆர்கே நகருக்கு மட்டும்”புதிய தொடர்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் சிறப்பா நடக்குதோ இல்லையோ, சிரிப்பா சிரிக்காம இருந்தா சரி. ஆளாளுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுறாங்க, ஆர்.கே.நகர தனிநாடா மாத்துவோம்னு மட்டும் தான் சொல்லல. என்னதான் நடக்குதுனு பொறுத்திருந்து பார்ப்போம்னு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு இருக்கு. நமக்கு எதுக்கு வம்பு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம்.
@arulgud
எங்களை யாராலும் தடுக்க முடியாது, ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்போம் #விஷால்
ஹா ஹா யாரு பெத்த புள்ளையோ இப்படி தனியா பொலம்பிட்டு கெடக்கு.

@KartikMuru
என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறுவது நாகரிகமற்ற பேச்சு -தீபா
உங்கள குழந்தைனு சொல்றாப்டினா கண்டிப்பா நாகரிகமற்ற பேச்சு தான்.

@arulgud
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றதேர்தல் வரும் #பிரேமலதா
முதல்ல கேப்டனை எப்ப மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு கூப்பிட்டு வர்றதுனு பாருங்கமேடம்.

@Kartik Raj P
அம்பானி வீட்டுல இருக்க கேலண்டரை எடுத்து ஒளிச்சு வெச்சுட்டா தேதி தெரியாம ஆபர் எக்ஸ்டன்ட் பண்ணுவாருல்ல?!

@ஸ்ரீ வாணி
DP சேன்ஜ் பண்றனால
மாற்றங்களை கொண்டு வரலாம்னு நினைக்கும்
முட்டாள் மக்கள்…
#விவசாயத்தை ஆதரித்து
ஒரு மரங்களை கூட
தன் வீட்டில் வளர்ப்பதில்லை….

@Lakshmi Kanthan Vadamalai
திமுகாதான் எனது போட்டியாளர் _ஜெ,தீபா
நான் ஏட்டையாகூடதான் போவேன் “மொமன்ட்,

@சங்கர பாண்டியன்
தலைவரின் கை வண்ணத்தில் காதல் ரசம் சொட்டச் சொட்ட வந்த திரைப்படம் எது!?
1) தலைவரின் பெண்சிங்கமா!?
2)தலைவரின் கண்ணம்மாவா!?
3) தலைவரின் பொன்னர் சங்கரா!?
#சரியான விடையளிப்பவர்களுக்கு #கவண் படத்தோட லிங்க் இன்பாக்ஸில் அனுப்பப்படும்

@Lakshmi Kanthan Vadamalai
அது என்ன ஆர்கே நகருக்கு மட்டும் அது செய்வோம் இது செய்வோம்ன்றீங்க!
அப்ப ஏற்க்கனவே ஜெயிச்ச 233 தொகுதிலயும் என்ன கிழிச்சிட்டீங்க!

@Villavan Ramadoss

பதஞ்சலி பொருட்களை வாங்கி தேசபக்தன் எனும் அந்தஸ்தை பெறுவீர்.
தேசதுரோகியாவதில் இருந்து தப்புவீர்.
ஜெய்ஹிந்த்.

@naaraju
எல்லாரோட கையிலயும் ஒரு செங்கல். என்னடான்னா, அடிக்கல் நாட்டு விழாவாம்!

தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*