கலவர அபாயம் :ஆர்.கே. நகருக்கு வந்தது ராணுவம்!

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் தினகரன் அணியினருக்கும், பன்னீர் அணியினருக்கும் கடும் மோதல் நிலவுகிறது. இது தலைவர்கள் மீதான தாக்குதலாகவும் ஆங்காங்கே வெளிபடுவதோடு அதிமுக தொண்டர்களும் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தொண்டர்களுக்கு இடையே மோதல் வெடித்து வாக்குப்பதிவை அது பாதிக்கப்படும் சூழல் உருவானதால் எதிர்க்கட்சிகள் ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தை அதிக அளவு பயன்படுத்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், கூடுதலாக வீரர்களை வரவழைத்துள்ளது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வெளியூர்களில் இருந்து வந்து முகாமிட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பணப் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தனியாக குழுக்கள் அமைத்துள்ளது என்.சி.சி. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட தேர்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.அதேசமயம், பிரச்சாரத்தின்போது இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் ஏற்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் பெருமளவு பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே 3 கம்பெனி துணை ராணுவப் படை சென்னை வந்துள்ள நிலையில், மேலும் 7 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்னும் 2 நாட்களில் வர உள்ளதாக தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*