கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் காப்புரிமை இல்லாத போலியோ மருந்து!

மாமனிதர் ஜோனாஸ்எட்வர்ட் ஸல்க்
‘போலியோ இல்லாத- புது உலகம் படைப்போம்’ என்று அறைகூவல் விடுத்து, தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களின் மூலம் போலியோ நோயில் இருந்து சிறு பிள்ளைகளை காப்பாற்றி, வெற்றி பெற்ற நாடுகளின் முதல்தரப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் போலியோசொட்டு மருந்து தொடர் முகாம்கள் நடைபெறும் இவ்வேளையில், காப்புரிமை இல்லாத போலியோவை கண்டு பிடித்தவர்தான் இந்த நாளில் நினைவு கூற வேண்டிய மாமனிதர்!
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்தார் ஜோனாஸ்எட்வர்ட் ஸல்க். போதிய வருவாய் இல்லாத ஏழ்மைச் சூழலில் பிறந்த எட்வர்ட் ஸ்லக் நன்றாக படித்து மருத்துவ ஆய்வைத் துவங்கி ‘போலியோ’ சொட்டு மருந்தை கண்டு பிடித்தார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950 களில் உலகம் முழுவதும் ‘போலியோ’ எனப்படும்இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் மிகவும் அதிகரித்தது.குறிப்பாக, 1952-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாகினர்.
நியூ யார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்காவில் நிலவிய இந்த அவல நிலையை கண்டு மனம் நொந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று மருந்தை கண்டுபிடிக்கும்ஆராய்ச்சியில் இரவும்,பகலும் மூழ்கிப் போனார். 10 ஆண்டுகால கடும் உழைப்பின் பலனாக, 1955-ம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார். இந்த நாளை அமெரிக்கா தேசிய விடுமுறை நாள் போல கொண்டாடியது. அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம்டாக்டர்கள், 64 ஆயிரம் பள்ளி ஊழியர்கள், சுமார் 2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர்,அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசாரமுகாமினை தொடங்கினார். இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகத்தான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளைய சமுதாயத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த அரியகண்டுபிடிப்புக்கான காப்புரிமை தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் அறிவித்தார்.

அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960-களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்கமுடியும். ஆனால், பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு கால ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார். அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், அவரிடம்‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்ற கேள்வியை முன்வைத்த போது “ சூரியனுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது.இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்துஉயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார்.
இன்று முடமாகி வாழ்வை இழக்கும் ஆபத்துள்ள பல கோடி மனித உயிர்களை போலியோ இலவசமாக காப்பாற்றுகிறது என்றால் அது டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸலக்கின் தியாகத்தால்தான். கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்டாக்க், 23-06-1995அன்று தனது 80-வது வயதில் காலமானார். அதனால் தான் அவரை மாமனிதர் என்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*