‘பசுக்களை கொல்வோரை தூக்கில் போடுவோம்’ சத்தீஷ்கர் முதல்வர்!

பசுக்களை கொல்கிறவர்களை தூக்கிலிடுவோம் என்று பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இந்தியாவில் அசைவ உணவை உட்கொள்ளும் மக்களே அதிகம் உள்ளார்கள். சைவ உணவுகளை உண்ணும் சிறு பிரிவினர் அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் அசைவ உணவை உட்கொள்ளும் மக்கள் மீது கலாச்சார ரீதியான ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள். உணவுப்பழக்கத்தின் மீது திணிக்கப்படும் இந்த ஆதிக்கம் இப்போது இந்தியா முழுக்க எழுச்சி பெற்று வருகிறது.
பாஜக உத்திரபிரதேச தேர்தலின் வென்ற பிறகு இந்துத்துவம் புதிய எழுச்சியோடு தன்னை வளர்த்துக் கொண்டு வரும் நிலையில். உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு இறைச்சி வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாது இந்த தடையின் கீழ் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிராக எனும் பெயரில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி பா.ஜனதா ஆளும் சத்தீஷ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங்கிடம் செய்தியாளர்கள் வேள்வி எழுப்பினர். அவர் பதிலளிக்கையில், சத்தீஷ்கரில் கடந்த 15 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் பசுவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அது போன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களை தூக்கில் போடுவோம். சத்தீஷ்கரில் பசுவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
உ.பி. குஜராத் போன்ற மாநிலங்களில் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அம்மாநிலத்தில் பசு, மாடு, எருமை, உள்ளிட்டவைகளை கொல்வது, இறைச்சியாக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்படுகிறவர்களுக்கு 7 ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும் என்கிறது அச்சட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*