ரஷ்யாவில் குண்டு வெடிப்பு!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் கூட தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்ப முடியாத  சூழல் எழுந்துள்ளது. ஐய்ரோப்பிய நாடுகள்  துவங்கி உலகம் முழுக்க பெரும் சவாலாக திவீரவாதம் வளர்ந்து வரும் நிலையில் ரஷ்ய  நகரின் மையப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டுவெடிப்பு காரணமாக ரயில் நிலையங்கள் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இருப்பினும், 10 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இதனையடுத்து 3 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷேங்கோ, புதின் இடையிலான சந்திப்பு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறவிருந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் உலக அரங்கில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிரியா அரசோடு இணைந்து ஐ.எஸ்  தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ரஷ்யா நடத்தி வருகிறது. இப்போருக்கு கண்டனம் தெரிவித்து இத்தாக்குதல் ட் ஐ.எஸ் அமைப்பினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*