உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

The Dalai Lama directs a peace sign toward the head table, where US President Barack Obama was seated, during the National Prayer Breakfast in Washington, DC, on 5 February 2015.

சீனாவிடம் இருந்து தனி நாடு கோரி போராடும் திபெத் மத தலைவர் தலாய்லாமாவுக்கு இந்தியா அரசியல் தஞ்சம் அளித்துள்ளதோடு. அருணாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. வி.ஐ,பி அந்தஸ்தோடு இந்தியாவில் சுதந்திரமாக இருக்கும் தலாய்லாமா நாடு கடந்த திபெத் அரசையும் அருணாச்சலப்பிரதேசத்தில் அமைத்துள்ளார். ஆனால், அந்த அருணாச்சலப்பிரதேசத்தையே சீனா உரிமை கோரி வருகிறது. “அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ளவர்கள் சீனாவுக்கு வர விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என சில ஆண்டுகளுக்கு முன்ன அறிவித்தது.
இப்போது அருணாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு வெளியில் இருக்கும் தலாய்லாமா அருணாச்சல முதல்-மந்திரி பெமாகண்டு அழப்பின் பேரில் அருணாசலப் பிரதேசம் செல்கிறார்.இந்நிலையில் தலாய் லாமா பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இருதரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என சீனா எச்சரித்தது. ஆனால் இவ்விவகாரத்தில் ஸ்திரமான நடவடிக்கையில் இருக்கும் இந்திய அரசு சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்து, தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்தது.
சீனாவின் இந்த எச்சரிக்கையை அடுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு பேசுகையில் தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம் முற்றிலும் மதம் சார்பானது, இதற்கு அரசியல் சாயம் கொடுக்க வேண்டாம். சீனாவை சேர்ந்த மக்களுடனும் நல்ல நட்புறவை கொண்டு இருக்கவே அருணாச்சல பிரதேச மக்கள் விரும்புகிறார்கள். சீனாவுடன் பிரச்சனையை கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டது கிடையாது, அதேபோன்று இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும் சீனா தலையிடாது என எதிர்பார்க்கிறோம். அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்தில் யாருக்கும் பிரச்சனை இருக்காது என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறிஉள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*