புரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்முறை!

இந்திய திருத்தலங்களில் புகழ் பெற்றது பூரி ஜெகந்நாதர் ஆலையம். இக்கோவிலுக்குச் சென்ற 11 வயது சிறுமி கோவிலுக்குள் வைத்தே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் நிகழ்வு பொது மக்களிடமும், பக்தர்களிடமும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சிறுமி கோவிலுக்குள் சென்ற போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அச்சிறுமியை அந்த பகுதியில் வசிப்பரும் ஜெகந்நாதர் கோவிலுக்கு அடிக்கடி வந்து போகும் நபருமான குரு சரண் பெக்ரா என்பவர் சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று வன்புணர்ச்சி சித்தரவைக்குள்ளாக்கியிருக்கிறார்.
குருசரண் சிறுமி மீது நடத்திய பாலியல் வன்முறையில் சிறுமி மிக மோசமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். நிலைகுலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை மக்கள் மருத்துவமனையில் சேர்த்த தோடு சம்மந்தப்பட்ட நபரை காவல்துறையிலும் ஒப்படைத்துள்ளனர்.
இந்தியா முழுக்க பாஜக வெற்றியை அடுத்து இது இந்து தேசியவாதத்தில் எழுச்சிக் காலமாக கருதப்படுகிறது. கோவில்களும், ஆஸ்ரமங்களும், சாமியார்களும் பெரும் செல்வாக்கோடு இருக்கும் இக்காலத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது இந்து பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*