என் வழி மோடி வழி: ரஜினிகாந்த்

2010ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ‘எந்திரன்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகமான ‘2.0’ பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ‘2.0’, ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சங்கர் பொதுவாகவே தன் படங்களை பிரம்மாண்டமாக எடுக்க விரும்புபவர், ஒரு பாடல் காட்சிகளையாவது வெளிநாடுகளில் படமாக்குவது அவரின் ஸ்டைல். ஆனால், 2.0 திரைப்படம் முழுவதும் இந்தியாவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ‘2.0’ படத்தைக் காட்டிலும் குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘ஐ’ திரைப்படத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களை அழைத்து வந்த சங்கர், இந்த படத்தை இந்தியா சார்ந்து உருவாக்க காரணம் இருக்கிறது.

பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கும் பல்வேறு திட்டங்களில் ‘Make in India’ என்ற திட்டமும் ஒன்று. அதாவது வணிகம் சார்ந்த விசயங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட வேண்டும், அப்படி செய்வதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது இந்த திட்டத்தின் குறிக்கோள். இந்த திட்டத்துக்கு ஆதரவாக ரஜினியின் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படத்தை இந்தியாவில் உருவாக்கும்படி மோடி, ரஜினியிடம் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினியும் போடியின் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘2.0’ படத்தை இந்தியாவிலே உருவாக்கும்படி கூறியிருக்கிறார். இதனால் ‘2.0’ திரைப்படம், சென்னை மற்றும் டெல்லி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இதன்மூலம் வாய்ப்புகள் அமைந்தாலும், கலை சார்ந்த விசயத்தில் இந்த திட்டத்தை திணிப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*