துரத்தி வந்த மாட்டை விரட்டிய பெண் மீது பசுக்காவலர்கள் தாக்குதல்!

பசு காவலர்களின் வெறிச்செயல் வடஇந்தியாவில் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. டெல்லி, குஷும் பஹாடி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி ஷர்மிளா ஆகிய இருவரும் சாவித்ரி முகாம் அருகே உள்ள கழிப்பறை நோக்கி செல்லும்போது ஷர்மிளாவை நோக்கி ஒரு பசு ஓடி வந்துள்ளது. அதனை தன் வழியிலிருந்து விரட்டுவதற்காக கல் ஒன்றை எடுத்து வீசியிருக்கிறார். சில நொடிகளில் அங்கு வந்த பசுவின் உரிமையாளர்கள் ஷர்மிளாவையும் சண்டையை தடுக்க வந்த அவரது தம்பியையும் மண்வெட்டியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் ஷர்மிளாவுக்கு தையலிடும் அளவு காயங்களும், அவரது தம்பியின் கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. கூட்டம்கூடி தடுத்த பின்னரே தாக்குவதை நிப்பாட்டியிடுக்கின்றனர். இதுகுறித்து ஷர்மிளாவின் கணவர் ஜெய்சங்கர், வசந்த் குன்ஜில் உள்ள வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாருக்கான நடவடிக்கையில் போலீஸார் இறங்கும் முன்னரே மற்றொருவரை தாக்கியிருக்கிறது அந்த கும்பல். ஷர்மிளா தாக்குதலின் போது அதனை தடுக்க வந்த தனியார் ஓட்டுநர் உதய் சந்த் என்பவரை தாக்கியுள்ளனர். ஜெய்சங்கர் அளித்த புகாரின் பேரில் நான்கு நபர்களை கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*