மாரத்தான் போட்டி: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாராத்தான் போட்டி கோவாவில் வருகின்ற மே 28-ம் தேதி நடைபெறுகிறது. ‘Goa going pink’ என்ற பெயரில் பெண்களை மையப்படுத்தி நடைபெறும் இந்த மாராத்தான் போட்டியில் சுமார் 2500 பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன், “உலகம் முழுவதும் அதிகமான பெண்கள் இறப்பதற்கு மார்பக புற்றுநோயும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாராத்தான் போட்டி நடைபெறவுள்ளது” என்று கூறியிருக்கிறார். 3 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என 3 பிரிவுகளில் இந்த மாராத்தான் போட்டி நடைபெறுமென விழாவை நடத்தும் யுனைடெட் சிஸ்டர் ஃபவுண்டேசன் (United Sisters Foundation) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*