25 வருட பயணம்: மணி பற்றி ஏ.ஆர். ரகுமான்

இயக்குனர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 வருடங்களாக இணை பிரியாமல் பயணித்து வருகின்றனர். இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகியுள்ள படம் ‘காற்று வெளியிடை’. இப்படம் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் மணிரத்னத்துடனான 25 வருட பயண அனுபவம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து, அவர், “அந்த காலகட்டத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் படத்தை அதிகமாக பார்த்து இருக்கிறேன். முதன்முதலில் இசையமைக்கும் போது என்னை நானே பல கேள்வி கேட்டுக்கொள்வேன். எந்த லெவலுக்கு வேலை செய்யவேண்டும். ஒரு ரசிகனாக அவருக்கு எப்படி இசையமைக்க வேண்டும் என எண்ணினேன். அவரும் அவரின் விருப்பத்தை தெரிவிப்பார். எங்களுடைய கூட்டணியில் காதல் சார்ந்த திரைப்படங்கள் அதிகமாக அமைந்துள்ளது. ஐந்து நாட்களில் பாடல்கள் வேண்டும் என்று கூறமாட்டார். இலக்கை எவ்வாறு அடையலாம் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும். மணி அவர்கள் என்னிடம் ‘ரோஜா” படத்திற்கு முன் சந்திக்கும்போது ராஜா உடன் இசை அமைத்தீர்கள். உங்களிடம் தரமான இசை உள்ளது என கூறினார். அப்போது எப்படி இசையமைக்கலாம் என தீவிரமாக யோசிக்கத்தொடங்கினேன். பிறகு 5 வருடம் கழித்து வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்தது. ‘காற்றுவெளியிடை’ படம் மூலமாக நாங்கள் மீண்டும் எங்களது சிறப்பான கூட்டணியை நிரூபித்துள்ளோம். இனி மக்கள்தான் படத்தை பற்றிய கருத்தை முடிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு போட்டியும், பொறாமையும் கிடையாது. இசை என்பது ஒரு கலை. ஒரு சில படங்களில் பாடல் தான் படத்தை முடிவு செய்யும். அதனால்தான் அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*