‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு தேசிய விருது

64-ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருது, ராஜுமுருகன் இயக்கத்தில் ஊழல் மற்றும் அரசியல் அவலங்கள் பற்றி பேசிய ‘ஜோக்கர்’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல் சிறந்த பின்னணி பாடகருக்கான விருது, ‘ஜோக்கர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜாஸ்மின்’ பாடலை பாடிய சுந்தர் ஐய்யருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தர்மதுரை’ படத்தில் ‘எந்த பக்கம்’ பாடல் எழுதியமைக்காக சிறந்த பாடலாசிரியராக வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூர்யாவின் ‘24’ படத்தில் பணிபுரிந்த திருநாவுக்கரசு, சிறந்த ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த எழுத்தாளராக தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*