விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன் : விஜயபாஸ்கர்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து சுகாதரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க இன்று நேரில் ஆஜராகும்படி மூவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வழக்கறிஞர் ஐயப்ப மணியோடு வந்தார். அதன்பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தில் அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. காலை 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட விசாரணை பிற்பகல் 3.30 மணிவரை நடைபெற்றது.

விசாரணை முடிந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வருமானவரித் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன் . அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன் என்றார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*