ஆர்.கே.நகர் :திமுக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு!

ஜெயலலிதா மறைவையொட்டி காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். இது போட்டியிட்ட அனைத்து  கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் வெற்றி பெறும் வாய்ப்போடு இருந்த திமுகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தேர்தல் தடையை திமுக தலைவர்களுள் ஒருவரான துரைமுருகன்  வரவேற்ற போதிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதியில் தேர்தல் தள்ளிப் போனமை ஸ்டாலினை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.  பணப்பட்டுவாடா செய்த தினகரன் அணியினரையும், தேர்தலை ரத்து செய்த தேர்தல் கமிஷனையும் கண்டித்து திமுக ஆர்.கே. நகர் தொகுதியில்  பொதுக்கூட்டம் நடத்த நினைத்தது.ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இந்நிலையில் கண்டன கூட்டம் நடத்த திமுகவுக்கு அனுமதி தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்துள்ளார். திமுக தாக்கல் செய்த வழக்கு பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*