காற்று வெளியிடை காப்பியா: விளக்கம்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்த ‘காற்று வெளியிடை’ கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது.சமூக வலைத்தளங்களில் படம் ஏகப்பட்ட விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.  படம் மிக மோசமாக இருக்கிறது எனத் துவங்கி அது பல்வேறு படங்களின் காப்பி என்றும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

எப்போது மணிரத்னம் படம் வந்தாலும் அதற்கு ஊடக முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் இந்த முறை அப்படி கிடைத்தும் கூட மணிரத்னம் படம் இதற்கு முன்னர் இப்படி விமர்சனங்களுக்கு உள்ளானதில்லை. இதனால் மணிரத்னம் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்நிலையில், இந்த படம் கொரியன் சீரியலான ‘டீசென்டன்ட்ஸ் ஆப் த சன்’ என்பதன் அப்பட்டமான காப்பி என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. இந்த தொடரின் நாயகன் ராணுவத்தில் பணிபுரிவர். நாயகி ஒரு டாக்டர். இருவருக்கும் இருக்கும் மோதல், காதல் இதுதான் இந்த தொடரின் கதை. அந்த தொடரின் கதையும், காற்று வெளியிடை படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த படம் 1971-ல் போர் விமானியாக இருந்த திலீப் பரூல்கர் என்பவருடைய விமானம் பாகிஸ்தானால் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது, அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 1972-ல் அவர் தன்னுடன் அடைக்கப்பட்டிருந்த இரண்டு சிறை கைதிகளுடன் அங்கிருந்து தப்பிக்கிறார்.

இந்த உண்மை கதை ‘Four miles to Freedom’ என்ற பெயரில் புத்தகமாக பெய்த் ஜான்ஸ்டன் என்பவர் எழுதியிருக்கிறார். ‘காற்று வெளியிடை’ படத்தில் சில காட்சிகள் இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எந்த சீரியலின், படத்தின் காப்பி கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*