அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை புகார்!

 ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் தலைமைச் செயலகம் முதல் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆளும் அதிமுகவுக்கு வேண்டியவர்கள் என சகல இடங்களிலும் ரெய்டு ரெய்டு அடித்து தொடர்ந்து தமிழகத்தை பதட்டமாக்கி வருகிறது வருமான வரித்துறை.
சமீபத்தில் ரெய்டுக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன். ராடான் நிறுவன உரிமையாளர்களும்,சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுமான ராதிகா, சரத்குமார் ஆகியோரையும் சம்மன் அனுப்பி விசாரித்து வரும் வருமான வரித்துறை அடுத்ததாக தமிழக அமைச்சர்கள் சிலரை குறிவைத்திருக்கிறார்கள்.
இந்த வளையத்தினுள் வந்திருப்பது  அமைச்சர்கள் காமராஜ் மற்றும்  உடுமலை ராதாகிருஷ்ணன் முதல் கட்டமான  மீது வருமான வரி துறையினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். வருமானவரித்துறையினர் அளித்த புகாரில்  அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின்பொழுது, பெண் அதிகாரி ஒருவர் மிரட்டப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீதும் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*