உ.பி-இல் இடஒதுக்கீடு ரத்து!

சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரபிரதேச தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே வென்ற பாஜக பின்னர் காவிச்சாமியார் யோகி ஆதியநாத்தை முதல்வராக அறிவித்தது. பதவியேற்ற அதித்யநாத் பல்வேறு அதிரடிகளை அறிவித்து வருகிறார்.  நடந்து முடிந்த தேர்தலில்  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  6 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் 25 புதிய மருத்துவ கல்லூரிகளை அம்மாநிலத்தில் அமைப்போம்” என வாக்குறுதி அளித்தது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டதும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மூலமாக அந்தத்த மையங்களுக்கு திட்டங்களை அனுப்புவோம் என தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் அஷுடோஷ் கோபால்ஜி தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி உருவாக்கப் போகும் 25 புதிய மருத்துவக் கல்லூரிகளில்  இடஒதுக்கீட்டை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதன்படி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகிய பிரிவினருக்கு தனியார் மருத்துக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளிக்கப்படாது. இதற்கான உத்தரவு வெகு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*