உ.பி மாநிலத்தில் ஆன்டி ரோமியோ ஹரியானாவில் ’ஆப்ரேஷன் துர்கா’!

இளம் பெண்களை தொலைக்குள்ளாக்கிறவர்களை பிடிக்க என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதியத்யநாத் ஆன்டி ரோமியோ எனும் படையை அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பை இந்து அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டு இளம் காதலர்கள் சாலையில் ஜோடியாக நடந்து செல்கிறவர்களை எல்லாம் தாக்கத் துங்கினார்கள். பெரும்பாலும் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுபான்மை ஜோடிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடந்தாலும் இந்துக்களும் இத்தாக்குதலில் இருந்து தப்பவில்லை எனும் நிலையில் ரோமியோ படை குறித்த அச்சம் மக்களிடமும் இளைஞர்களிடமும் நிலவியது.
பெரும் பாலும் சமூக விரோதக் கும்பல்கள் வழிப்பறி கொள்ளைக்கும் இது போன்ற சூழலை பயன்படுத்திய நிலையில் ஹரியானாவை ஆளும் பாஜக அரசு அம்மாநிலத்திலும் ‘ஆபரேஷன் துர்கா’ என்ற படையை உருவாக்கியுள்ளது.
பெண்களை பாதுகாப்போம் எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் இந்த சிறப்புப் படை ஹரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையின் கீழ் செயல்பட உள்ளது, முதல்நாள் சிறப்பு படை நடத்திய ‘ஆப்ரேஷன் துர்கா’ வின் போது 14 மாவட்டங்களில் 74 ஆண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அரியானா மாநில சிறப்பு படையில் 24 பிரிவுகள் உள்ளன. 14 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், 6 தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் 13 பெண் கான்ஸ்டபிள்கள் அடங்கிய படைகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறப்பு படையானது பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனையில் ஈடுபடும் அங்கு பெண்களிடம் தவறாக நடந்துக் கொள்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை தொடங்கும் என அம்மாநில அரசு தரப்பு தெரிவித்து உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*