கத்திப்பாரா போராட்டம்:எழுவருக்கு சிறை!

டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் கண்டு கொள்ள வில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான இரண்டு கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுமே இந்த விவகாரத்தில் கள்ளமவுனம் சாதிக்கின்றன.
இது இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கிய நிலையில் இயக்குநர் கவுதமன் தலையில் சென்னை கத்திப்பாரா சந்திப்பை சங்கிலியால் பூட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பல மணி நேரம் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. போராட்டம் நடத்தியவர்களை தாமஸ் மவுண்டில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்திருந்த காவல்துறையினர் மாலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தினார்கள்.
கவுதமன், அருள் தாஸ், பிரபாகரன்,திவாகர்,கோபாலகிருஷ்ணன், அரவிந்த் (கல்லூரி மாணவர்), வழக்கறிஞர் லோகேஸ்வரி ஆகியோரை ஆலந்தூர் நீதிமன்றம் ஏப்ரல் 25 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு தமிழ் அமைப்புகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*