ஏ.டி.எம்-களில் பணமில்லை ஏன்? -அராசகன்

கள்ளப்பணத்தை ஒழிக்கப் போகிறோம். பதுக்கலை தகர்க்கப் போகிறோம் என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியக் குடிமக்களை அதிரடியாக அதிர்ச்சியில் ஆழ்த்தினார் மோடி.

மோடி தனது ஓவர் கோட்டை மாற்றும் போதெல்லாம் நோக்கங்களும் மாறி “பணமில்லா” பொருளாதாரம் என்பதில் நிலை கொண்டது. ஜனவரி 1 2017-ல் புதிய இந்திய பிரசவ த்தின் வலியை நாட்டின் பலகோடி மக்கள் ஆளுக்கொரு விதமாக அனுபவித்தனர். ஜனவரி இறுதி வரை ஏ டி எம் முன் ஒட்டு மொத்த தேசமும் காத்துக் கிடந்த நிலைமை மாறி, கடந்த இரு மாதங்களாக பணத் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்தது.
ஆனால், கடந்த ஒரு வாரமாக நிலைமை மாறி விட்டது. சென்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களைப் போல் பெரும்பாலான ஏடிஎம் எந்திரங்கள் மூடிக் கிடக்கின்றன. திறந்திருக்கும் ஏ டி எம் களிலும் பணம் இல்லை. பணம் இருக்கும் ஏ டி எம் களின் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறனர்.

வரிசையில் காத்திருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் ..’2 மாசமா ஓரளவு சீராகத்தானே இருந்தது ..திடீர்னு எப்படி பணமில்லாமல் போகும்..என்னமோ நடக்குது” என்பது போன்ற கருத்தையே பலரும் தெரிவித்தனர்.
மதிப்பிழந்து விட்டதா ரூபாய் நோட்டு?
செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை அச்சிட வேண்டிய ரிசர்வ் வங்கி அச்சிடும் அளவை குறைத்துக் கொண்டது.மக்களால் எடுக்கப்படும் 500 , 2000 நோட்டுகள் மறு புழக்கத்துக்கு வருவதில்லை போன்ற பலவேறு காரணங்கள் கூறப்படுகிறது,
உண்மையில் மக்கள் ஏ.டி.எம்.களில் இருந்து எடுக்கும் பணங்களை வங்கியில் டெபாசிட் செய்ய அஞ்சுகிறார்கள். நமது பணம் எப்போது வேண்டுமென்றாலும் இல்லாமல் பொய் விடும். அல்லது அரசே அதை எடுத்துக் கொள்ளும் என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு சொந்த குடிமக்கள் தங்களை ஆளும் அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டின் மீது நம்பிக்கையிழந்த துயரம் இப்போதுதான் நடந்திருக்கிறது.
நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் 50 நாட்களில் நிலைமை சீரடையும் என்ற மோடியின் வாக்குறுதி 156 நாட்களாகியும் “செத்த மாதிரியே” இருப்பதன் பின்னணியில் வங்கி நிதிப் பரிவர்த்தனை லாப ஆதார நோக்கம் இருக்கலாம் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள் .

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்த பின் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மின்னணு பணவழங்கல் விகிதம் 1000 விழுக்காடு வரை அதிகரித்தது. இந்த மாதங்களில் , பே.டி.எம் போன்ற இ வேலட்டுகள் மூலம் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை , 191 கோடியாக , கிட்டத் தட்ட 4 மடங்கு ,உயர்ந்தது. இதனால் ருசி கண்ட வங்கிகள் தங்களது சொந்த UPI செயலிகளை அறிமுகம் செய்தன. இருந்தாலும்,இந்த செயலிகளைப் பயன்படுத்த தயங்கி எப்போதும் போல ஏ டி எம் –ல் பணம் எடுத்து ரொக்கச் செலவு செய்து வந்த வாடிக்கையாளர்களை மின்னணு பணப்பரிவர்த்தனையை நோக்கித் தள்ளும் விதமாக , 4 முறைக்கு மேல் ஏ டி எம்களில் பணம் எடுத்தால்.ஒவ்வொரு முறைக்கும் 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று மிரட்டல் நிபந்தனைகளை முன்னணி தனியார் வங்கிகள் விதித்தன.

வங்கிகள் – இவேலட் நிறுவனங்கள் -பணமில்லா பொருளாதார ஆதரவாளர்களின் இந்த மகிழ்ச்சி நீடிக்கப் போவதில்லை என்பதை கடந்த இரு மாத மின்னனு பணப் பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

2017-2018 ம் நிதி ஆண்டில் 2500 கோடி மொத்த மின்னனு பணப் பரிமாற்றங்கள் என்ற இலக்கை மத்திய அரசு அடைய நினைக்கிறது . அதை எட்ட பலவேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், ஆன்லைன், வேலட்டுகள்,மின்னணு பணப் பரிவர்த்தனை விகிதம் சென்ற டிசம்பர் மாதத்தோடு ஒப்பிடும் போடு கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 சத விகிதம் குறைந்துள்ளது.மார்ச் மாதம் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பல்வேறு காரணங்களுக்காக பணம் செலுத்தல் விகிதம் அதிகரிக்கும், பெரும்பாலும் அவை மின்னணு பரிமாற்றமாகவே இருக்கும்.

ஏ டி எம்களிலும் பணம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டால் மார்ச் மாததிற்குப் பிறகு மின்னனு பரிவர்தனை விகிதம் மேலும் குறையக் கூடும். இது ஒரு நாளைக்கு சராசரியாக 69 கோடி மின்னனு பணப் பரிவர்த்தனைகள் என்ற அரசின் இல்லை எட்டுவதில் சிரமமேற்படுத்தும். மக்களிடம் புழங்கும் ரொக்கப் பணத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் , மக்களை வலுக்கட்டாயமாக மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு தள்ளி இலக்கை அடைய நினைக்கிறது மத்திய அரசு..ஏ டி எம் க ளில் திடீர் பணமில்லாமை அதில் ஒன்றாக இருக்கலாம்.

உத்திரப் பிரதேச தேர்தல் வெற்றி என்பது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கிடைத்த மக்களின் உறுதியான ஆதரவு என்று பாஜக பிரச்சாரம் செய்யத் துவங்கி விட்டது. டிஜிட்டல் இந்தியா எனும் கோஷத்தை அது இன்னும் தீவிரமாக்கும். இதனால் பலன் யாருக்கு என்று தேச விரோதிகள் எழுப்பும் கேள்விக்கு விளம்பரங்கள் பதில் சொல்லும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*