கைதான எழுவரும் புழல் சிறையில் உண்ணாவிரதம்!

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நேற்று இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்கள் சென்னை கத்திப்பாரா சந்திப்புக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினார்கள். கத்திப்பாராவை  சங்கிலியால்  பூட்டி போராடியதால் சென்னை ஸ்தம்பித்துப் போனது.

வழக்கமாக சம்பிரதாயமான அடையாளப் போராட்டங்களை மட்டுமே கண்டு வந்த காவல்துறையும், அரசியல் கட்சிகளும் அதிர்ச்சியடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழுவரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிறுத்தி புழல் சிறையில் அடைத்தது. சிறையில் அடைக்கப்பட்ட எழுவரும் கோஷங்கள் எழுப்பிய படி சிறை சென்றனர்.

இந்நிலையில், இன்று ( 14/04/2017 ) காலை முதல் புழல் சிறையில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை  கைது செய்யப்பட்ட எழுவரும் புழல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர்.

1] அருள் தாஸ், த/பெ. யாகப்பன், 33 [2] பிரபாகரன், த/பெ. சக்திவேல், 26 [3] திவாகர், த/பெ. சேகர், 23 [4] இயக்குனர் வ. கெளதமன், த/பெ. வடமலை, 44 [5] கோபாலகிருஷ்ணன், த/பெ. வரதராஜ், 47 [6] அரவிந்த், த/பெ. முரளி (கல்லூரி மாணவர்) [7] வழக்குரைஞர் லோகேஸ்வரி

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*