தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும் : தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழக அரசியலில் பாஜக கட்சியானது காலூன்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் பாஜக கட்சியால் நிச்சயம் காலூன்ற முடியாது என்று கூறினார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திராவிட கட்சிகளுக்கு 50 வருடங்களாக ஆதரவு கொடுத்த தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்களா? தமிழகத்தில் நிச்சயம் பாஜக காலூன்றும். அதை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார். இதை நான் ஒரு சவாலாகவே சொல்கிறேன். அம்பேத்கர் சிலைக்கு முன்னிருந்து சொல்கிறேன் நிச்சயம் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்றும். இவ்வாறு அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*