இந்தியாவின் வயதான கைதி விடுதலை!

உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தியாவின் முதிய வயதுடைய கைதி சௌத்தி யாதவ் விடுதலை செய்யப்பட்டார்.
தனது 38-வது வயதில் 1979 -ஆம் ஆண்டு கொலை வழக்கொன்றில் சிக்கிய சௌத்தி யாதவ் மீதான கொலை வழக்கு உறுதியாக 2003-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 38-வது வயதில் கொலைசெய்த சௌத்தி பல ஆண்டுகள் கழித்து கைதாகி சிறை சென்ற பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
14 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த பின்னர் வியாழக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டார்.
முதலில் வாரணாசி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சௌத்தியை மருமகன் கவுதம் யாதவின் வேண்டுகோளை ஏற்று கோரக்பூர் சிறைக்கு மாற்றியது சிறை நிர்வாகம்.
14 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்துடன் இணைந்தது குறித்து முதியவர் பேசும் போது “ என்னுடைய குடும்பம் என்னை விடுதலை செய்ய இந்த அளவு முயற்சிக்கா விட்டால் நிச்சயம் நான் யாரையும் காணாமல் சிறையிலேயே இறந்திருப்பேன்.என்னுடைய மனைவியை கடைசியாக ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் அழுது கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் எனது ஆசையை நிறை வேற்றி விட்டார் என்று கண்ணீர் மல்க கூறீனார் சௌத்ரி.
இவர் முந்தைய ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சியின் பரிந்துரையின் கீழ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்றும் ஆளுநர் ராம் நாயக் அவர்களும் சௌத்ரி யாதவை விடுவிக்க தன்னுடைய அதிகாரங்களை பயன்படுத்தினார் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*