காஷ்மீர் இடைத்தேர்தல்: பரூக் அப்துல்லா வெற்றி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி பெறும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளார் வென்றிருப்பது. முதல்வர்  முப்தி முகமது சயீத்யும் அவரது கூட்டணி கட்சியான பாஜகவையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, ஸ்ரீநகர் தொகுதி எம்.பியாக இருந்த தாரிக்கர்ரா ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். ஆனால் ஜனநாயகக் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார்.
ஸ்ரீநகர் தொகுதியில் கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்த வன்முறைச் சம்பவங்களால் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியானார்கள். வன்முறை காரணமாக 7.13 சதவீத ஓட்டுகளே பதிவானது.
இந்த தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லாவும் அவரை எதிர்த்து ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நசிர் அகமது கானும் போட்டியிட்டனர்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. ஏஜெண்ட்கள் தவிற ஊடகங்களைக் கூட அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. தேர்தல் முடிவுகளை அவ்வப்போது தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே பரூக் அப்துல்லா முன்னணியில் இருந்தார். 12.00 மணி நிலவரப்படி அவர் 9,705 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னணியில் இருந்ததால் அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. இறுதியில், பரூக் அப்துல்லா 10 ஆயிரத்து 775 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி மக்களோடு பகிருந்து கொண்ட பரூக் அப்துல்லா “இதுவரை இல்லாத வகையில் ரத்தக்கறை படிந்த தேர்தலாக இது நடந்து முடிந்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவாக இருப்பதையே இந்த தேர்தல் காட்டுகிறது “ என்றார் பரூக்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*