காஷ்மீர்: இராணுவ அதிகாரியை தாக்கியவர்கள் கைது

கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடந்த ஸ்ரீநகர் இடைத் தேர்தலில் போராட்டக்காரர்கள் கல்வீசியதால் கலவரம் ஏற்பட்டது. இதில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். அதற்கடுத்த சில தினங்களில், இளைஞர்கள் சிலர் ஒரு இராணுவ வீரரை (CRPF) தாக்குவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் ஷேவக், காம்பீர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இராணுவ அதிகாரியை தாக்கிய இளைஞர்களில் ஐந்து நபர்கள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மொத்தம் 11 பேர், கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களில் மூன்று நபர்கள் தாக்கியதை உறுதி செய்துள்ளனர். மற்ற இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்தபோது திரும்பி தாக்காமல் அமைதிகாத்த இராணுவ அதிகாரியை அனைவரும் பாராட்டியுள்ளனர். அவர் திரும்ப தாக்கியிருந்தால் பிரச்சனை பெரிதாகியிருக்கும். முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக சம்பவத்தை பற்றிய விரிவான அறிக்கையை அளிக்கும்படி கேட்டிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*