விஜயபாஸ்கர், கீதாலட்சுமிக்கு இரண்டாவது முறையாக நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சோதனைக்குள்ளான அனைவரும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நேரில் ஆஜராகி  விளக்கமளிக்கும்படி வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 7-ஆம் தேதியும், கீதாலட்சுமி கடந்த 13-ஆம் தேதியும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், இருவருக்கும்  இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*