8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:வழக்கு!

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை என மொத்த அரசு இயந்திரத்தையும் காவி மயமாக்கி வருகிறது. மாநில அரசுகளையும் ஆளுநரை வைத்து கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியை இந்தியா முழுமைக்குமான ஒற்றை மொழியாக கொண்டு வருவதிலும் தீவிரம் காட்டுகிறது.

மத்திய அரசின் சி.பி.எஸ். சி பாடத்திட்டத்தில் இருந்து பிரெஞ்ச் உள்ளிட்ட அயலக மொழிகளை இந்த ஆண்டில் இருந்து நீக்கி விட்ட மத்திய அரசு மாநில மொழிகளுக்கும் முக்கியத்தும் கொடுக்கவில்லை. ஆனால் இந்தி கட்டாயம் என்று கூறுகிறது.ஆனால் இந்தியாவில் உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்தான் இந்தி மொழி பேசப்படுகிறது. இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் இந்தி பேசு மொழியாக இல்லை.

இந்நிலையில்,  நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளியை பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வவ்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாடு முழுவதும் இந்த கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை.

இருப்பினும், இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்தியை ஒரு அலுவல் மொழியாக மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, தேசிய மொழியாக அல்ல என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன.

நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் அதிகரிக்கும் பொருட்டு இந்தி மொழியை கட்டாயமாக்க பள்ளிகளுக்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. 1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மும்மொழி கொள்கையின் அம்சங்களை சுட்டிக் காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. டெல்லி செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபத்யாய், “மும்மொழி கொள்கையின்படி இந்தி பேசும் மக்கள் உள்ள மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மார்டன் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். அதேபோல், இந்தி அல்லாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கற்பிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*