சபரி மலை தேசிய புனித தலம்?

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு கோரிக்கை விடுத்தால்  சபரிமலை  கோவிலை   தேசிய புனித தலமாக அறிவிக்கப்படும் என்று மந்திய மந்திரி மகேஷ்சர்மா கூறியுள்ளார்.
பத்தினம்திட்டா நகரில் மத்திய மந்திரி மகேஷ்சர்மா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கேரள அரசு கோரிக்கை விடுத்தால் சபரிமலை தேசிய புனித தலமாக அறிவிக்கப்படும். பத்தினம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பலகோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆனால் அந்த நிதியில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கேரளாவில் மருத்துவம் மற்றும் உடல்நல வாரியத்தை மத்திய அரசு தொடங்கும். உலக யோகா தினமான ஜூன் 21–ந்தேதி இந்த வாரியம் செயல்பாட்டுக்கு வரும். கேரளத்தில் இருந்து 4 பேர் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*