கெத்து வெறும் வெத்து: பெப்சியின் மாறுவேசம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது வெளிநாட்டு குளிர்பானங்களான கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களை புறக்கணிக்க மாணவர்களும் இளைஞர்களும் குரல் கொடுத்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த மார்ச் 1ஆம் முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி போன்றவற்றை விற்பனை செய்வதில்லை என தமிழக வியாபாரிகள் சங்கம் முடிவெடுத்தனர். இதனால் கோக் மற்றும் பெப்சியின் வியாபாரம் சரியத் தொடங்கியது. தமிழக குளிர்பானங்களையே மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கினார்கள்.

இந்நிலையில் இந்த பன்னாட்டு நிறுவனம் தன் வியாபார சரிவை சீர்செய்ய புதியமுறை ஒன்றை கையில் எடுத்திருக்கிறார்கள். பெப்சி நிறுவனம் தன் பெயரையும் அடையாளத்தையும் மாற்றி ‘கெத்து’ என்ற பெயரில் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் பெயர் வைப்பதன் மூலமாக தமிழர்களை கவர்ந்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த குளிர்பானம் அதிகமாக விற்கப்படுகிறது. திரைப்படங்களில் வரும் மாறுவேச யுக்தியை பன்னாட்டு நிறுவனம் பயன்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*