சுகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர பணம் பெற்ற புகாரில் கைதான சுகேஷ் சந்திரா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பு குறுக்கு வழியில் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்காக பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரிடம் 50 கோடி ரூபாய் தினகரன் பேரம் பேசியுள்ளார். முதற்கட்டமாக சுகேஷூக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது இன்று டெல்லியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார். இதனால் தினகரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவர் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், இரண்டாவது குற்றவாளியாக சுகேஷ் சந்திராவும் சேர்க்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு சம்மன் அனுப்ப டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா காவல்துறையினரால் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமானி மல்ஹோத்ரா முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வழக்கில் தினகரனும் கூடிய விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கபார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*