பெங்களூர் விரைந்தார் தினகரன் :சசிகலாவுடன் சந்திப்பு!

Begusarai: Security personnel maintaining queues of voters at a polling station during Bihar assembly elections in Begusarai on Monday. PTI Photo (PTI10_12_2015_000062B)

தான் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் கசிந்திருக்கும் நிலையில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்திக்க தினகரன் பெங்களூரு விரைந்திருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், பன்னீர் தலைமையில் இன்னொரு அணியாகவும் அதிமுக பிளவு பட்டது. இதில் பன்னீர் அணியினருக்கு மத்தியில் ஆளும் பாஜகவின் ஆதரவு உள்ளது. அவர்களின் வழி நடத்துதலேயே இவர்கள் அதிமுகவை கைப்பற்ற அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக பிளவு பட்டதால் இரட்டை இலைச் சின்னத்தையும் அதிமுக என்ற கட்சியையும் முடக்கியது தேர்தல் ஆணையம். இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட இருந்தனர். ஆனால் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் சிக்கியதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தினகரன் குழுவினர் லஞ்சம் கொடுத்ததாக தெற்கு டெல்லியில் அமைந்துள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கோடியே 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் டெல்லி போலீசார் தினகரனை கைது செய்யக்கூடும் என்ற செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பாக பேசவும், மகாதேவன் மரணச் சடங்கில் சசிகலா கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி பேசவும் பெங்களூர் செல்கிறார் தினகரன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*