சொற்றொடரால் வந்த சோதனை: அர்னாப் கோஸ்வாமி

டைம்ஸ் நவ் (Times Now) ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்த பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கேஸ்வாமி. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் பணியை ராஜினாமா செய்தார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறிய அர்னாப், கடந்த டிசம்பர் மாதம் ‘ரிபப்ளிக்’ என்ற புதிய தொலைக்காட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி இந்த மாதம் ‘ரிபப்ளிக்’ தொடங்கவிருந்த நிலையில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமி ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ‘தேசம் அறிய விரும்புகிறது’ (Nation wants to know) என்ற பிரபலமான சொற்றொடரை பயன்படுத்தி வந்தார். இந்த சொற்றொடரை தன் ‘ரிபப்ளிக்’ தொலைக்காட்சியில் பயன்படுத்த நினைத்த அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் டைம்ஸ் நல் தொலைக்காட்சியிலிருந்து வந்ததென அவர் நேரடியாக கூறவில்லை.

இதுகுறித்து அர்னாப் ஒரு மூன்று நிமிட ஆடியோ க்ளிப்பை யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதில், “ தேசம் அறிய விரும்புகிறது (Nation wants to know) என்ற சொற்றொடரை பயன்படுத்தினால் சிறை செல்வேன் என ஒரு ஊடக நிறுவனம் ஆறு பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சொற்றொடர் அவர்களுக்கு சொந்தமானதல்ல. நான் 20 ஆண்டுகாலமாக அந்த சொற்றொடரை பயன்படுத்தி வருகிறேன். இதுபோன்ற மிரட்டல்களால் என்னை ஒடுக்க முடியாது. நான் நிச்சயம் அந்த சொற்றொடரை பயன்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*