இனி சுழல் விளக்கும் சைரனும் கிடையாது : நிதின் கட்காரி

மே 1-ஆம் தேதியிலிருந்து பிரதமர், மத்திய அமைச்சர்களின் வாகனங்களில் உள்ள சிகப்பு வண்ண சைரன் அகற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பசுக்காவலர்கள் அமைப்பு, சிறுபான்மையினர் மேல் தொடர்ந்து தாக்குதல் என்று பாஜக அரசில் ஏராளமான வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இதையெல்லாம் மத்தியில் ஆளும் பாஜக அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. பாஜக அரசில் சாமான்ய மக்கள் ஒரு பாதுகாப்பற்ற உணர்வையே உணர்கிறார்கள். இதை பாஜக அரசு உணர மறுக்கிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த அரசு சாமான்யர்களுக்கானது என்பதை நிரூபிக்க இனி சுழல் விளக்கு மற்றும் சைரனை அகற்ற முடிவு செய்திருப்பதாக கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- இன்று(நேற்று) நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர பிரதமர், மத்திய மந்திரிகள் ஆகியோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.  இந்த ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் வி.ஐ.பி.க்களின் வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குகள் மற்றும் சைரன் ஒலிக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட தீர்மானித்தோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். முதல்கட்டமாக என்னுடைய காரில் இருக்கும் சிவப்பு விளக்கை கழற்றி விடுமாறு தெரிவித்துள்ளேன்’ என குறிப்பிட்டார்.

மத்திய அரசு சாமான்ய மக்களுக்கானது என்பதை நிரூபிக்க சுழலும் சிவப்பு விளக்குகள் மற்றும் சைரனை அகற்றுவதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் பசு மாட்டினை உண்டாலோ ஏன் பசு மாட்டினை வாகனங்களில் ஏற்றி சென்றாலோ பசு காவலர்கள் என்ற அமைப்பினர் அதே சாமானிய மக்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றனர். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்பதை நிரூபிக்க சுழல் விளக்கையும் சைரனையும் மட்டும் அகற்றுவது உகந்ததல்ல சாமானிய மக்களுக்கு இந்த நாட்டில் ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்தாலே போதும் ஆனால் அந்த  உணர்வை அளிக்க பாஜக அரசு தவறிவிட்டது என்பதே உண்மை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*