இயேசுவை அவமதித்தாரா வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்!

சமீபத்தில்  ஊடகம் ஒன்றுக்கு  நேர்காணல் ஒன்றை வழங்கிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் “ 2000 வருடங்ளுக்கு முன் இயேசு கிறீஸ்து ஒரு குற்றவாளி, பாவி, அவருக்கு மரணதண்டனை  வழங்கப்பட்டது. அது போல  பாலியல் கொலை வழக்கில் ஒன்பது சிறுமிகளை   பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய  பிறேமனந்த சுவாமியும், அவரை கடவுளாக மனிதர்கள் வணங்குவதில் தவறு இல்லை!! என்று பிரேமானந்தாவை  இயேசுவோடு ஒப்பிட்டு பேசினார்.

முதல்வரின் இப்பேச்சு  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல் சமையத்தவர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.  இந்த நிலையில் விக்னேஸ்வரன் அதனை மறுத்துள்ளார். தான் அவ்வாறு பேசவில்லை என்றும் வேண்டுமென்றே என் பதில்களில் நான் சொன்னதாக ஒலியை குறைவாக வைத்து நேயர்களுக்கு கேட்காத வகையில் தரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் செவ்வி எடுத்தவர் கேட்ட கேள்விமட்டும் தெழிவாக தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவரை நீங்கள் எப்படி உங்கள் குருவாக ஏற்கலாம் நீங்கள் ஒரு நீதியரசர் தற்போது ஒரு முதலமைச்சர் இது தவறல்லவா? என்று கேட்டார். அதற்கு நான் குற்றவாளியாக காணப்பட்டு சிலுவையில் அறைந்த ஒருவரை 2000 வருடமாக மக்கள் தெய்வமாக கொண்டாடுகின்றார்கள் அல்லவா என்றேன். இதைத்தான் இயேசுவையும் பிறேமானந்த சுவாமியையும் முதலமைச்சர் ஒப்பிட்டுவிட்டார் என்று எனக்கு எதிராக கிறீஸ்தவ சகோதரர்களை கோபமடைய வைக்க எத்தனித்துள்ளனர் என்றும் இயேசு கிறீஸ்துவின் பரம அபிமானி தான் என்றும் பிறேமானந்த சுவாமிதான் பல சந்தர்ப்பங்களில் இயேசு நாதரின் வாழ்;க்கை வரலாறுகளை மேற்கோள்களாக எடுத்துரைப்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயேசு நாதர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு பிரேமானந்த சுவாமி மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் வேறு இருவரையும் நான்ஒப்பிட்டு பேசவில்லை இருவரையும் ஒப்பிட முனைந்தவர்கள் அவர்களே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு முன்னுதாரணம் கூறினேன். அது கிறீஸ்தவ மக்களின் மனங்களை உன்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தமடைகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தவர் தான் கல்லூரியில் படித்த காலப்பகுதியிலேயே கிறிஸ்தவம் சம்மந்தமான பாடம் அதேபோல் இஸ்லாம் பௌத்தம் இந்துமதம் போன்ற எல்லா மதங்களிலிருந்தும்; பாடவிதானம் தரப்பட்டு அதில் தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் முதலிடத்திற்கான பரிசு பெற்றவன் இதனால் எல்லாமதங்களையும் அனுசரித்து போற்றி வருபவன் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வர் அப்படிச் சொல்லவில்லை என்கிறார். ஆனால் இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யூதர்களின் புரட்சியாளர். ரோம ராம்ராஜ்ஜியத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்ததற்காக அவர் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*