டிஜிட்டல்வாசி: “இப்போ மட்டும் என்ன #மவுன_ராகமா ஓடுது”

“அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அரசியல் உங்கள் வாழ்வில் தலையிடும்”-னு மார்க்ஸ் அவர்கள் சொல்லிச் சென்றுவிட்டார். நம் தமிழக அரசியலின் தற்போதைய சூழலில் தலையிட்டால் சிரிப்புதான் வரும். நேத்து ராத்திரி நாலு பேர் முன்னாடி என்ன ஒருத்தன் அசிங்கமா திட்டிட்டான், அப்பறமா காலையில் ஃபோன் பண்ணி வரசொல்லி 100 பேர் முன்னாடி என்ன புகழ்ந்துட்டான். நானும் அவன மன்னிச்சுட்டன், இந்த புல்லரிக்கும் பாசக்கதைய படிச்சதோட நெட்டிசன் குறிப்புகள பாத்துருங்க…

@ஷோபியா பெலிக்ஸ்
பேலியோ ஆரம்பிச்சியிருக்கேன்..நெய்யும் ,பாதாமுமா சாப்ட்டுட்டு இருக்கேன்..ஆண்டவா எதாவது எதிர்வினை ஆகி,என் குடும்பத்துக்கு என்னை அடையாளம் தெரியாம
ஆக்கிடாதப்பா
## ஓம் பேலியோவாய நமஹ

@சேகர் ஆறுச்சாமி
சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கும் பெண்கள் கூட்டத்தின் மத்தியில் சலனமில்லாமல் சிறுபுன்னகை செய்யும் பெண் கவனமீர்க்கிறாள்…
#களஆய்வு

@Manushi
நரகம் என்பது யாதென கேட்பின் மின்சாரம் இல்லா கோடைக்காலம் என்பேன்.

@sekar
லைக் நிறைய விழுக சோசியம் பாத்து ராசிக்கல் மோதிரம் போட்டுக்கலாம் னு இருக்க பிரண்ட்ஸ்

@பாலமுருகன் ஜீவானந்தம்
சாப்ட்வேர் பத்தி பேசலாம்னு போன் பன்னா அந்த புள்ள சாப்பாடு பத்தி பேசுது
#ச்சை….

@அ.ப. இராசா
அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் எம்.பி., ஒ.பி.எஸ் குடும்பமே அரசியலிலும் பொறுப்பிலும் இருக்கிறது. இப்படி எல்லா நிர்வாகிகளுக்கு பின்னும் ஒரு கதை இருக்கிறது.
இவர்கள் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொல்வது யாருக்கு?

@Umamaheshvaran Panneerselvam
ஒரே மாதிரியாக நெளிந்து நெளிந்து வளைந்து வளைந்து நடனமாடி கடுப்பேற்றுவதில் ராகவேந்திரா லாரன்ஸ் ஒரு ஆண் ஸ்ரேயா..

@வெ. பூபதி
கலைஞர் அரசு கொடுத்த டிவி, ஜெ. அரசு கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் போன்றவை பழுதடைந்து விட்டன என்பது குறியீட்டுத் தகவல்!

@Sakthi Saravanan
தினகரனை பாத்தா பாவமா இருக்கு ப்ரோ.
ஆரம்பக்கட்டம் தான் ப்ரோ. சரியான டாக்டரை பாத்தா குணப்படுத்திடலாம் ப்ரோ.

@Meenamma kayal
அய்யோப்பாவமிந்த ஆண்கள், நினைப்புத்தான் பொழப்பக்கெடுக்குமாம்ன்னு ஒரு சொலவட உண்டு.. அதுதான் இது… ரியாலிட்டி என்னன்னா மனைவி கூட போகும்போது ரோட்டுல ஒரு அழகான பொண்ணு போறான்னு அவளே பார்க்கச்சொல்வா… ஒருவாரம் பத்து நாள் கழிச்சு சண்ட வந்தா ”நீ என் கூட வரும்போது இன்னொருத்திய சைட் அடிச்சவன்தானேன்னு” செக் வைப்பாள்.. நெம்பச்சிரமம்

@சம்மு
போடி போ எனக்கொன்றும் கவலையில்லை
ஆனால் போகும் முன் தயவு செய்து தந்துவிட்டு போ
என் #இதயத்தை அல்ல

உன் #தங்கச்சி போன் நம்பர

@shopia felix
ரொம்ப டல்லா ஃபீல் பண்ணா ப்ரெஷ்ஷா முகம் கழுவிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு நீ செம்ம அழகுடி /டா ன்னு சொல்லிப் பாருங்களேன்…அப்படியே 10 டம்ளர் பாதாம் மில்க் குடிச்ச எனர்ஜி வரும்.
##verified

@டாமினிக் டொரேட்டோ
மே 4 முதல் #அக்னி_நட்சத்திரம் ஆரம்பம் – செய்தி
இப்போ மட்டும் என்ன #மவுன_ராகமா ஓடுது.

தொடரும்……..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*