வறட்சியால் செத்து மடியும் நாட்டு மாடுகள்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா போராட்டம் கிளர்ந்த போது அதில் நாட்டு மாடுகளை பாதுகாப்போம் என்ற கோஷங்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. இன்னொரு பக்கம் மாட்டிறைச்சிக்காக மாடுகளை கொல்லவதை தண்டனைக்குரிய குற்றமாக்கியது இந்திய அரசு. ஆனால் தமிழகத்தில் நிலவும் வறட்சியால் பல நூறு நாட்டு மாடுகள் நீரினின்றி உணவின்றி மடிந்து கொண்டிருக்கிறது சத்தமில்லாமல்.
2016-ஆம் ஆண்டு ஜூலையில் கோவை வனப்பகுதியில் மதுக்கரை மகாராஜ் என்ற இளம் பருவ யானை ஒன்று வனத்துறையினரின் தவறான கையாளலால் மரணமடைய யானைகள் மரணம் ஊடகங்களின் பேசு பொருளானது. கோவை, சேலம், தருமபுரியை ஒட்டிய வனபகுதிகளில் மட்டும் சில மாதங்களுக்குள் இறந்த யானைகளின் எண்ணிக்கை 20-பதை தாண்டியது.
காட்டு யானை தோட்டங்களுக்குள் புகுந்த போது “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி எழுதியவர்கள் அதன் வழித்தடங்களை அழித்து. அதை வறட்சிக்குள் தள்ளி விட்டவர்கள் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் அத்தனை யானைகளும் அடுத்தடுத்து மரணமடைய அதிலிருந்து வரவிருக்கும் வறட்சியை அரசும் உணரவில்லை. வனத்துறையும் உணரவில்லை. விளைவு இப்போது தமிழகம் முழுக்க வறட்சியால் பல்லாயிரம் பறவைகளும், நாட்டு மாடுகளும் அழிந்து கொண்டிருக்கின்றன.
கர்நாடக எல்லையில் இருக்கும் தமிழக மலைக்கிராமமான பர்கூர். இந்த கிராமத்தின் சிறப்பே அதன் நாட்டு மாடுகள். பர்கூர் சந்தையில் அதிக விலைக்குப் போவதில் இந்த மாடுகளும் கணிசமானவை. ஆனால் வறட்சியும் வேலையில்லா திண்டாட்டமும் சூழல் மாடுகளை கவனிக்காமல் அவை வேகமாக மடிந்து வருகிறது. தமிழகம் முழுக்க கொதிக்கும் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் மாடுகளும், பறவைகளும் மடிந்து வருவதாக கவலை கொள்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*