வறட்சியில் வாடும் வன்னி மக்கள்!

தென்னிந்திய மாநிலங்களை வறட்சி வாட்டுவது போல இலங்கையின் வட பகுதி மக்களையும் வறட்சி வாட்டி எடுக்கிறது. 30 ஆண்டுகால சிவில் யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆன போதிலும் வாழ்க்கையில் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை .அந்தப் போர் நேற்று நடந்தது போன்ற வடுக்களுடன் தான் மக்கள் வாழ்கின்றனர். போரால் நிலங்கள், வீடுகள், உறவுகள் என அனைத்தையும் இழந்த மக்கள் மீள்வதற்குள் இப்போது வறட்சி பெருமளவு விவசாயத்தை பாதித்துள்ளது.
வட மாகாணத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வரை வறட்சியால் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
பேரிடர் மேலாண்மைக்கான மத்தியக் குழு அளித்துள்ள அறிக்கையின் படி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் இன்றி மக்கள் அல்லாடுவதாகவும், தெரிவித்துள்ளது. யாழ்பாணத்தில் 33,359 குடும்பங்களும், கிளிநொச்சியில் 23,206 குடும்பங்களும் , முல்­லைத்­தீவில் 35,670 குடும்பங்களும்,வவு­னியாவில் 24,507 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது போன்ற வறட்சி மன்னார் மாவட்டத்திலும் காணப்படுகிறது. வட மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் சரி பாதிபேர் இந்த வறட்சியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*