கண்ணகி, ஒரு உண்மைப் பாத்திரத்தின் எதிரொலியா?

சிலப்பதிகாரம் சிலம்பை மையமாகக் கொண்டு அமைந்த கதை. மணிமேகலை சிலப்பதிகாரத்தை தொடர்ந்த மீதிக் கதையாகும். இவை இரண்டும் வரலாற்று சிறப்பு மிக்க சங்க இலக்கியங்களாகும். சிலப்பதிகாரத்தில், மதுரை மன்னன் பாண்டியன் நீதி தவறியதை கண்ணகி சுட்டிக்காட்டுவாள். இந்த வகையில் பார்த்தால், இந்த இரண்டு சங்க இலக்கியங்களும் ஆண் மகனை கொண்டு அமையாமல் பெண்ணை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்துள்ளது. இவ்விரண்டும் பெண்ணின் வீரப்பயணங்களாகும். பெண்களால் ஒரு சமுதாயத்தில் நீதிக்கான தேடல் எப்பொழுதும் இருக்கும் என இந்தக் கதைகள் இயம்புகின்றன.
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்:- இந்த இதிகாசங்கள் ஆண்களால் புனையப்பட்டு இருப்பது வியப்பூட்டுகிறது. சேர மன்னன் செங்குட்டுவனின் சகோதரனும், சமணத்துறவியுமான இளங்கோவடிகள்தான் சிலப்பதிகாரத்தை இயற்றியுள்ளார்.

இவர் புனைந்துள்ள கண்ணகி கதைப்பாத்திரம் யாரைக் கொண்டு அமைந்துள்ளது? இவரது சமகாலத்தவர்களான கபிலர் மற்றும் பரணர் கதைகளிலும் கூட கண்ணகி என்று ஒரு கதைப்பாத்திரம் வரும் வேளையில் சிலப்பதிகாரக் கண்ணகி கோவலன் என்பவருக்கும், பிறிதொரு கண்ணகி வேல் பேகன் என்பவருக்கும் திருமணம் செய்து தரப்படுகின்றனர்.
இவ் இரு கண்ணகிக்கும் இருக்கும் விசித்திரமான ஒற்றுமைகள் என்னவென்றால் கோவலன் கண்ணகியை ஒரு நல்ல மனைவியாகவும் பேகன் கண்ணகியை துக்கமுடைந்த மனைவியாகவும், அழும் பாத்திரமாகவும் விவரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் இரு கண்ணகியின் கணவர்களும் ஒரு ஆடல் பெண்ணை பார்த்து மயங்கி இவர்களை கைவிடுகின்றனர்.
இந்த சிலப்பதிகாரக் கதை வேல் பேகன் கண்ணகிக் கதையால் ஈர்கப்பட்டு புனையப்பட்டதா? என்பது விடை தெரியாத புதிராகும். இவருடைய வாழ்க்கை என்ன தான் சோகங்களுடன் இருந்தாலும் இன்று வரை இவர் அனைத்து பெண்டீராலும் பெண் கடவுளாக போற்றப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*