வாட்டாள் நாகராஜ் ஒரு கோமாளி: கன்னடர்கள் கருத்து

கன்னடர்களிடம் தமிழக நடிகர் சத்யராஜ் மன்னிப்புக் கேட்கா விட்டால் பாகுபலி 2-ஐ வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுத்தது. யாருடைய மிரட்டலுக்கும் பயந்து மன்னிப்புக் கேட்க மறுத்திருந்த சத்யராஜ், படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளரின் நலன் கருதி வருத்தம் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி வழங்கியிருக்கிறது வாட்டாள் நாகராஜ் தலைமையிலான அமைப்பு.

வாட்டாள் நாகராஜ், ‘கன்னடா சலாவளி வாட்டாள் பக்சா என்ற அரசியல் கட்சியை சார்ந்த இனவெறியர். கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தையும் பெருமையையும் காக்க வந்த அவதார புருசன் போல் தன்னை சித்தரிக்க நினைப்பவர். கன்னடர்கள் பலருக்கே அவர்மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. ‘பனவாசி பாலகா’ போன்ற அமைபுகள் கன்னடர்களின் நியாயமான பிரச்சனைகளுக்கு போராடி வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால், வாட்டாள் நாகராஜ் போன்ற கோமளித்தனமான வேலைகளை அவர்கள் செய்வதில்லை. வாட்டாள் நாகராஜ் மீது கன்னடர்களுக்கு அதிருப்தி ஏற்பட முக்கியமான காரணம், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மார்க் கபன் பிறந்தநாள் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகாவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு மார்க் கபனை தெரியாமல் இருக்காது. மார்க் கபன், கன்னடர்களுக்கு ஆதரவாக பெரும் பங்களிப்பை தந்த பிரிட்டிஷ் ஆணையர். அவரது 238ஆவது பிறந்தநாள் விழா அன்று வாட்டாள் நாகராஜும் அவரது அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஆங்கிலேயரின் சிலை நம் பொது இடங்களில் இருப்பது அவமானம் என்று கன்னடர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மனிதனை பற்றி கோமாளித்தனமான வாதத்தை முன் வைத்தார். இந்த கோமாளித்தனமான வேலையைதான் பாகுபலி-2 விஷயத்திலும் செய்திருக்கிறார். 2008ஆம் ஆண்டு சத்யராஜ் பேசியதை இப்போது அரசியல் செய்துள்ளார்.

‘பாகுபலி-1’ பாகம் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் செய்யாத வாட்டாள் நாகராஜ் இந்த இரண்டாம் பாகத்தில் பிரச்சனை செய்ய காரணம், பணம் பறிக்கும் முயற்சியாகும். ‘பாகுபலி’ திரைப்படத்தின் முதல் பாகத்தை காட்டிலும் அதன் இரண்டாம் பாகத்தில்தான் அதிகப்படியான பணத்தை கொட்டியிருக்கிறார்கள். பல்வேறு மொழிகளில் 5,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

வாட்டாள் நாகராஜ் பற்றிய கன்னடர்கள் கருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.
https://www.quora.com/What-is-the-general-opinion-of-Kannadigas-about-Vatal-Nagaraj

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*