டிஜிட்டல்வாசி: “தெர்மாகோலுக்கு ஈயவாளியே பரவாயில்லபோல”

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மாட்டு கோமியமும் சானமும் கேன்சர், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள குணப்படுத்தும்னு ஒரு வாட்ஸாப் கும்பல் சுத்துச்சு. அவங்களுக்கு எல்லாம் ஒருபடி மேல போய் தெர்மாகோல் திட்டத்த செயல்படுத்திருக்காரு ஒருத்தர்… அடுத்தது ரப்பர் பந்துகளாம். அது முடிஞ்சதும் பிளாஸ்டிக் வலையல் சீப்பு, சோப்பு டப்பா எல்லாத்தையும் தூக்கிபோட்டி அணைய மூடுனிங்கனா, மக்கள் கவலைய மறந்து சிரிச்ச முகமாவே திரிவாங்க.. நீங்க டிஜிட்டர் நோட்ஸ பாத்துருங்க.. தெர்மாகோல் சூழ் இணையம்….
@Manoj B
பெண்ணியம் என்பது தினமும் புதுப்புது விதமான சமையல் செய்து தருவது…
அதற்கென்று ஒரு எல்லையே கிடையாது

@அ.ப. இராசா
கோடைகாலத்தில் மதிய நேரத்தில் குளிப்பது கூட கடுங்காவல் தண்டனையின் இன்னொரு வடிவம் தான்

@Vinoth Kumar
அணைய தெர்மா கோலால மூடுற நம்ம அமைச்சர் செயலுக்கு சமமா மீம் போடலாம்னு யோசிச்சா….
எழவு இது வரைக்கும் ரிலீஸ் ஆன ஒலக சினிமா ஒன்னுல கூட இப்படி ஒரு காமெடி சீனே இல்ல….????
அசிஸ்டண்ட் டைரைக்ட்டர்ஸ்…. நோட் பண்ணுங்கையா நோட் பண்ணுங்கையா…

@Tamilmani Ramadoss
தெர்மாகோலை தொடர்ந்து இப்போ ரப்பர் பந்து.
ஃபேன்ஸி ஸ்டோர்காரன் கடையில மழை.

@Ilaya Raja
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்
வைகைக்கு தெர்மாகோல் கொடுத்தார் செல்லூர் ராஜூ.
#வரலாறு_முக்கியம்_அமைச்சரே#

@விமல் அன்புசெல்வன்
இந்த பேஸ்புக்ல ஒரு குரூப்பு இருக்காய்ங்க….!
மோடிய #கலாய்க்கிற போஸ்ட்டும் ஷேர் பன்னுவாய்ங்க,
யோகிய #ப்ரோமோட் பன்ற போஸ்ட்டும் போடுவாய்க…!
#இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்பாய்ங்க…!
#தமிழன் என்று சொல்லடானும் சொல்லுவாய்ங்க…!
ஒரே கொழப்பமா இருக்குடா டேய்…!
ஷேரிங்கா இருந்தாலும், ஒரு லாஜிக் வேனாமாயா…?
#அடேய்_கன்பீசன்_பாய்ஸ்…!

@பொன்னியின் செல்வன்
வெயில் காலத்தில் பீயர் ஆவியாதலை தடுக்க பாட்டில் உள்ளே தெர்மாகோல் போடப்படும்.
டாஸ்மாக் உறுதி

@Mohana Selvaraj
ஆ வெயிலு.. லெமன் ஐூஸ் போட ஐஸ் க்யூப் எடுக்க ப்ரிட்ஜ தொறந்தா ……….
ஆ கார்ல்ஸ்பெர்க் ???
ப்ரிட்ஜில பீரு இல்லாதவன்லாம் அன்ப்ரண்டு பண்ணிட்டு போங்கடே

@Tamilmani Ramadoss
ஜனாதிபதி வேட்பாளர் வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை.

@தோணி கௌதம்
தெர்மாக்கோல் மேல மார்கர் வச்சு அஜித்னு எழுதி ஆத்துல விட்டுருந்தா இப்படி பறந்துருக்குமா.

@Rama Lingam
இனி அந்த ஊர்க்காரங்க
வரதட்சணையா ஒரு பண்டல் தெர்மா கோல் கேட்டாலும் கேப்பாங்க

@Villavan Ramadoss
காலத்தால் அழிக்கவே முடியாத சூழல் நச்சு தெர்மாகோல்தான். அதை அணை முழுக்க போடுறதுக்கு தெய்வ லெவல் புத்திசாலித்தனம் வேணும்.
அம்மா கச்சிக்காரனுக்கு அறிவு இருக்கும்னு எதிர்பார்க்குறது நம்ம தப்புதானே..

@Sundara Pal
#எமதர்மன்
இதே தெர்மக்கோலை மேலோகத்தில் மந்திரக் கம்பளம் என்போம்.
நன்றாகவே மிதக்கும்

@Thoothukudi Prabakar
தெர்மாகோலுக்கு ஈயவாலியே பரவாயில்லபோல

தொடரும்…….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*